ஆசிய விளையாட்டு போட்டி : இந்தியாவிற்கு 8வது தங்கம்
இந்தோனேஷியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு இதுவரை 7 தங்கப்பதக்கங்கள் கிடைத்துள்ள நிலையில் இன்று ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் 8வது தங்கம் கிடைத்துள்ளது.
ஆசிய விளையாட்டு போட்டியில் இதுவரை இந்தியா 7 தங்கம், 12 வெள்ளி மற்றும் 20 வெண்கல பதக்கங்கள் பெற்று 9வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், இன்று நடைபெற்ற ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவை சேர்ந்த வீரர் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்றார்.
இதையடுத்து ஆசிய விளையாடு போட்டியில் இந்தியா 8 தங்க பதக்கங்களை பெற்றுள்ளது.