1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 2 மே 2024 (07:02 IST)

சிஎஸ்கே அணிக்கு மீண்டும் ஒரு தோல்வி.. பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுமா?

நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டியில் சென்னை அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ள நிலையில் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி வருமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ஐபிஎல் தொடர் போட்டியின் 49வது போட்டி நேற்று நடந்த நிலையில் நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 1602 ரன்கள் எடுத்தது

இதனை அடுத்து 163 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் அணி 17.5 ஓவர்களில் 163 ரன்கள் எடுத்தது.  அபாரமாக பந்து வீசிய பஞ்சாப் அணியின் ஹர்ப்ரீத் பிரார் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் அணி 8வது இடத்தில் இருந்து 7வது இடத்திற்கு சென்றிருந்தாலும் சிஎஸ்கே அணி அதே நான்காவது இடத்தில் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இதுவரை 10 போட்டிகளில் விளையாடி உள்ள சிஎஸ்கே அணி 5 போட்டிகளில் தோல்வி அடைந்த நிலையில் இனி வரும் போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நிலை உள்ளதாக தெரிகிறது.

Edited by Siva