செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 1 மே 2024 (21:32 IST)

கடைசி 2 ஓவர்களில் சொதப்பிய தல தோனி.. முதல்முறையாக அவுட்.. சிஎஸ்கே கொடுத்த இலக்கு என்ன?

Thala Dhoni
இன்று சென்னை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடந்த ஐபிஎல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி ஏழு விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

கடைசி இரண்டு ஓவர்களை சந்தித்த தோனி வெறும் 14 ரன்கள் மட்டுமே எடுத்தார் என்பதும், கடைசி பந்தில் அவர் அவுட் ஆகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. நடப்பு ஐபிஎல் போட்டி தொடரில் இதுவரை அவுட்டாகாமல் இருந்த தோனி முதல் முறையாக அவுட் ஆகி இருப்பது ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது,

முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தது என்பதும் கேப்டன் ருத்ராஜ் மட்டுமே ஓரளவு நிலைத்து ஆடி 62 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ரஹானே, சிவம் துபே,, ஜடேஜா, சமீர் ஆகியோர் அடுத்தடுத்து அவுட் ஆகியதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரன்கள் உயரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் 163 ரன்கள் என்ற இலக்கை நோக்கி பஞ்சாப் அணி இன்னும் சில நிமிடங்களில் பேட்டிங் செய்ய உள்ள நிலையில் அந்த அணிக்கு வெற்றி கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Edited by Siva