புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 14 பிப்ரவரி 2022 (18:27 IST)

சிஎஸ்கே அணியை புறக்கணிப்போம்: திடீரென டிரெண்ட் ஆகும் ஹேஷ்டேக்!

சிஎஸ்கே அணியை புறக்கணிப்போம்: திடீரென டிரெண்ட் ஆகும் ஹேஷ்டேக்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை புறக்கணிப்போம் என திடீரென டுவிட்டரில் ஹாஷ்டாக் பதிவாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
நேற்றும் நேற்று முன்தினமும் ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் நடைபெற்றது என்பதும் இதில் தக்கவைத்துக் கொண்ட நான்கு வீரர்களை தவிர 21 வீரர்களை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலம் எடுத்தது என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலம் எடுத்த வீரர்களில் ஒருவர் இலங்கையைச் சேர்ந்த மஹிஷ் தீக்சனா என்பவரும் ஒருவர்
 
 இவர் சிங்களர் என்றும் சிங்கள ராணுவத்தில் வேலை பார்த்தவர் என்றும் கூறப்படுவதால் தமிழர்களை கொலை செய்த சிங்கள ராணுவத்தை சேர்ந்த வீரரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலம் எடுப்பதா? என இணையதளங்களில் எதிர்ப்பு குரல் எழுப்பி உள்ளது 
 
இதனை அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை புறக்கணிப்போம் என்ற ஹாஷ்டாக் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது