1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 1 ஜூன் 2022 (21:36 IST)

தங்கம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை பிரதமர் மோடியுடன் சந்திப்பு!

boxing
தங்கம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை பிரதமர் மோடியுடன் சந்திப்பு!
உலக குத்துச்சண்டை மகளிர் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற வீராங்கனை பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
சமீபத்தில் துருக்கியில், பெண்களுக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் 12வது சீசன்நடந்த நிலையில் இந்த தொடரில் 52 கி.கி., எடைப்பிரிவில் இந்தியாவின் நிகாத் ஜரீன்,  தங்கப் பதக்கம் வென்றார். இதனையடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்தது
 
இந்த நிலையில் தங்கம் வென்ற நிகாத் ஜரீன் இன்று பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார். மேலும் தங்கம் வென்ற நிகாத் ஜரீன் பிரதமர் மோடி அவர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டார்.