செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 31 மே 2022 (16:31 IST)

நான் என்னை பிரதமராக என்றுமே நினைக்கவில்லை! – பிரதமர் மோடி!

இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்று 8 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் தன்னை ஒரு பிரதமராக என்றுமே கருதியதில்லை என அவர் பேசியுள்ளார்.

பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்று நேற்றுடன் சரியாக 8 ஆண்டுகள் முடிவடைந்துள்ளது. இதை சிறப்பிக்கும் விதமாக நேற்று முதல் ஜூன் 14ம் தேதி வரை நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் இன்று இமாச்சல பிரதேசத்தில் மக்களுக்கு கிசான் திட்டத்தின் கீழ் நிதியை விடுவித்து பேசிய பிரதமர் மோடி “இன்று இந்தியாவின் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உலக அளவில் பேசப்படுகிறது. உலக வங்கியே இந்தியா குறித்து பேசுகிறது. முன்னதாக வாரிசு அரசியல், ஊழல் பற்றியதாக இருந்த பேச்சுகள் தற்போது அரசாங்க திட்டங்கள் குறித்ததாக மாறியுள்ளது.

கோப்புகளில் கையெழுத்திடும் சமயம் மட்டும் நான் பிரதமர் என்ற பொறுப்புடன் செயல்படுவேன். அதன்பிறகு என்றுமே என்னை நான் பிரதமராக நினைத்து செயல்பட்டது இல்லை. 130 கோடி மக்களின் சேவகன் நான் என்றே செயல்பட்டு வருகிறேன்” என பிரதமர் மோடி பேசியுள்ளார்.