1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
  4. Blue Tick Delete on Dhoni's Twitter

தோனியின் டுவிட்டரில் புளூ டிக் நீக்கம்

Blue Tick Delete
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் டுவிட்டர் பக்கத்தில் உள்ள புளூ டிக் எடுக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் கேப்டன் தோனி. இவர் 3 வகையான போட்டிகளிலும் கோப்பை வென்று கொடுத்த கேப்டன் என்ற சாதனை படைத்தவர்.

சர்வதேசக் கிரிக்கெட்டிலிருந்து அவர் ஓய்வு பெற்றாலும் அவர் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குக் கேப்டனாகப் பொறுப்பேற்று விளையாடிவருகிறார்.

இந்நிலையில் கொரோனா இரண்டாம் அலையின் காரணமாக ஐபிஎல் 14 வது சீசன் ஒத்திவைக்கப்பட்டதால் தற்போது சென்னை அணி கேப்டன் தோனி ஓய்வு எடுத்து வருகிறார்.

இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் டுவிட்டர் பக்கத்தில் உள்ள புளூ டிக் எடுக்கப்பட்டுள்ளது. பிரபல நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்களுக்கு புளூ டிக் இருக்கும். தற்போது தோனியை 8.20 மில்லியன் பேர் ஃபாலியர்களாக உள்ள நிலையில் அவரது கணக்கில் புளூ டிக் நீக்கியுள்ளது ரசிகர்களுக்கு  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
நீட் விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய அவகாசம்! – தேசிய தேர்வு முகமை!