1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: சனி, 23 ஜூன் 2018 (21:22 IST)

துனிஷியாவை துவைத்தெடுத்த பெல்ஜியம்: 5-2 கோல் கணக்கில் வெற்றி

ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் இன்றைய ஆட்டம் ஒன்றில் துனிஷியா அணியை 5-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பெல்ஜியம் அணி அபார வெற்றி பெற்றது.
 
இன்றைய முதல் ஆட்டத்தில் ஜி பிரிவில் இடம்பெற்றுள்ள பெல்ஜியம் மற்றும் துனிஷிய அணிகள் மோதின. ஆரம்பம் முதலே பெல்ஜியம் அணியின் ஆதிக்கத்தில் போட்டி இருந்தது. இதனால் போட்டி தொடங்கிய ஆறாவது நிமிடத்தில் ஒரு கோல் மற்றும் 16வது நிமிடத்தில் ஒரு கோல் என இரண்டு கோல்களை பெல்ஜியம் அணியினர் அடித்தனர். இதனையடுத்து துனிஷியா அணி 18வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தது. அதற்கடுத்த சில நிமிடங்களில் பெல்ஜியம் அணி இன்னொரு கோல் அடித்ததால் முதல் பாதியின் முடிவில் 3-1 என்ற கோல்கணக்கில் பெல்ஜியம் முன்னிலை வகித்தது
 
இந்த நிலையில் இரண்டாம் பாதியில் பெல்ஜியம் ஆதிக்கம் தொடர்ந்ததால் 51வது நிமிடத்தில் ஒரு கோல் 90வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து 5-1 என்ற கணக்கில் பெல்ஜியம் இருந்தது. இந்த நிலையில் காயத்திற்கான கூடுதல் நேரத்தில் துனிஷியா ஒரு கோல் அடித்ததால் இறுதியில் பெல்ஜியஜ் அணி 5-2 என்ற கோல்கணக்கில் வென்றது