திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: சனி, 23 ஜூன் 2018 (08:25 IST)

கடைசி நிமிட பரபரப்பு கோல்: பிரேசில் வெற்றி

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று நடந்த ஒரு போட்டியில் 90 நிமிடங்கள் முடிந்த பின்னர் வழங்கப்பட்ட கூடுதல் நிமிடங்களில் அடுத்தடுத்து இரண்டு கோல்கள் போட்டு பிரேசில் அணி, கோஸ்டாரிகா அணியை வீழ்த்தியது. 
 
உலககோப்பை கால்பந்து தொடரில் பிரேசில் அணி இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளில் மூன்றில் வெற்றியும் ஒன்றில் டிராவும் செய்துள்ளது. இதனையடுத்து நேற்று பிரேசில அணி, கோஸ்டாரிகா அணியுடன் மோதியது.
 
பரபரப்பாக நடந்த இந்த போட்டியில் முதல் பாதி, இரண்டாம் பாதி ஆகிய இரண்டு நிலையிலும் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. எனவே ஆட்ட நேர முடிவில் 0-0 என்ற கோல் கணக்கில் இரு அணிகளும் சமநிலை வகித்தன
 
இந்த நிலையில் 90 நிமிடங்கள் முடிந்த பின்னர் காயம், ஆட்டம் நேரம் நிறுத்தம் ஆகியவற்றை கணக்கில் கொண்டு 7 நிமிடம் கூடுதலாக அளிக்கப்பட்டது. இதில் பிரேசில் அணி முதல் நிமிடத்திலேயே கோல் போட்டு அசத்தியது. பிரேசில் அணியின் ஃபிர்மினோ தலையால் முட்டிய பந்தை பிலிப்பே கவுட்டினோ வேகமாக ஓடிவந்து அடித்து கோலக்கினார். இதனையடுத்து 7வது நிமிடத்தில் நெய்மர் எளிதாக ஒரு கோல் அடித்தார். இதனால் பிரேசில் அணி, கோஸ்டாரிகாவை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது