உலகக்கோப்பை கால்பந்து: இன்றைய ஆட்டங்கள் குறித்த முழு விபரம்

a
Last Modified வெள்ளி, 22 ஜூன் 2018 (13:52 IST)
உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று நடைபெற்ற போட்டியில் அர்ஜென்டீனா அணிக்கு எதிரான போட்டியில் குரேஷிய அணியும், பெரு அணிக்கு எதிரான போட்டியில் பிரான்ஸ் அணி வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா - டென்மார்க் அணிகளுக்கு இடையிலான போட்டி டிராவில் முடிந்தது.
இந்நிலையில், இன்று மாலை 5.30 மணிக்கு நடக்கும் இ பிரிவு ஆட்டத்தில் பிரேசில் - கோஸ்டாரிகா அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் பிரேசில் அணி கட்டாயம் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நோக்கில் விளையாடவுள்ளது
 
இதையடுத்து, இரவு 8.30 மணிக்கு நடைபெறும் டி பிரிவு ஆட்டத்தில் ஐஸ்லாந்து - நைஜீரியா அணிகள் மோதுகின்றன.
n
 
அதையடுத்து, இரவு 11.30 மணிக்கு நடைபெறும் இ பிரிவு ஆட்டத்த்தில் செர்பியா - சுவிட்சர்லாந்து அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் செர்பிய அணி சுவிட்சர்லாந்தை வென்று தனது 2வது வெற்றியை பதவி செய்யும் நோக்கில் உள்ளது.இதில் மேலும் படிக்கவும் :