1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (10:29 IST)

அந்த பட ஷூட்டிங் எப்போது தொடங்கும் என ஆவலாக உள்ளேன்… மகேஷ் பாபு!

நடிகர் மகேஷ் பாபு மற்றும் எஸ் எஸ் ராஜமௌலி கூட்டணி குறித்த தகவல் சில மாதங்களாக வெளியாகி வருகிறது.

இயக்குனர் ராஜமௌலி இதுவரை தொட்டதெல்லாம் ஹிட்தான். அதுபோல தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகர்கள் எல்லோருக்கும் அவர் ஹிட் கொடுத்துவிட்டார். இன்னும் மகேஷ் பாபுவோடு மட்டும் இணையவில்லை. இந்நிலையில் ஆர் ஆர் ஆர் படத்துக்கு பிறகு இருவரும் இணைய உள்ளனர்.

இந்த படம் பற்றி முதல்முறையாக பேசியுள்ள மகேஷ் பாபு ‘அந்த படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்ற ஆவலில் உள்ளேன்.’ எனக் கூறியுள்ளார். ஆர் ஆர் ஆர் படமும் மகேஷ் பாபுவின் சர்காரு வாரிபட்டா படமும் சங்கராந்தி பண்டிகையை ஒட்டி வெளியாகலாம் என சொல்லப்படுகிறது.