1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (11:15 IST)

7 பேர் விடுதலை மனுக்கள் குப்பைத் தொட்டியில் கிடக்கின்றன… வைகோ காட்டம்!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எழுவர் விடுதலை சம்மந்தமாக முன்னாள் ஆளுநரிடம் அளிக்கப்பட்ட மனுக்கள் குப்பைத் தொட்டியில் கிடப்பதாக் ஆவேசமடைந்துள்ளார்.

தமிழகத்தில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் எழுவரின் விடுதலைக்காக வெகு காலமாக போராடி வருபவர்களில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் ஒருவர். இந்நிலையில் நேற்று சென்னையில் இருந்து மதுரை வந்த அவரிடம் எழுவர் விடுதலை குறித்து கேள்வி முன் வைக்கப்பட்டது.
அப்போது அவர் ‘முன்னாள் ஆளுநரிடம் இது சம்மந்தமாகக் கொடுக்கப்பட்ட மனுக்கள் குப்பைத் தொட்டியில் கிடக்கின்றன. இப்போதுள்ள ஆளுநர் என்ன செய்கிறார் என்று பார்க்கவேண்டும். உச்சநீதிமன்றம் விடுதலைக்கு எந்த தடையும் இல்லை என சொல்லிவிட்டது. தமிழக அரசும் அதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறது.’ எனக் கூறியுள்ளார்.