2023 உலகக் கோப்பையிலும் அவர் விளையாடுவார்: கிளார்க் கூறுவது யாரை தெரியுமா?


Sugapriya Prakash| Last Updated: புதன், 20 செப்டம்பர் 2017 (21:44 IST)
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி ஸ்டீவ் ஸ்மித் தலைமையில் விளையாடிவருகிறது. முதல் ஒரு நாள் போட்டியில் தோல்வி அடைந்ததால் ஆஸ்திரேலிய அணிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

 
 
கேப்டன் ஸ்மித்தின் பேட்டிங் நீண்ட காலமாக தனித்துவமாக இருந்து வருகிறது. ஆனால் இந்தியாவுக்கு எதிரான முதல் தோல்வியால் அவரது கேப்டன்சிக்கு சவால் ஏற்பட்டுள்ளது.
 
இரண்டாவது ஒரு நாள் போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் ஆஸ்திரேலிய அணி உள்ளது. இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கெல் கிளார்க் தோனி பற்றி சமீபத்தில் பேசியுள்ளார்.
 
அவர் கூறியதாவது:- தோனி 2019 உலகக் கோப்பையில் விளையாடுவாரா என்று என்னை கேட்காதீர்கள், அவர் நிச்சயம் 2023 உலகக் கோப்பையில் கூட விளையாடுவார் என தெரிவித்துள்ளார்.
 
சமீபத்தில் இந்திய பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் தோனி 2019 உலகக் கோப்பையில் விளையாடுவார் என நம்பிக்கை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 


இதில் மேலும் படிக்கவும் :