1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 4 டிசம்பர் 2019 (13:09 IST)

இனி அடிக்கடி இரவு - பகல் டெஸ்ட்தான்! - கங்குலியின் ஆசை!

இனி டெஸ்ட் போட்டிகளில் ஒரு போட்டியாவது பகல் - இரவு போட்டியாக இருக்கும் என பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.

இந்தியா  - வங்கதேசம் இடையேயான டெஸ்ட் போட்டியில் இரண்டாவது டெஸ்ட் பகல் - இரவு ஆட்டமாக நடைபெற்றது. மேலும் அதில் முதன்முறையாக இந்தியா பிங்க் நிற பந்தில் விளையாடியது. இருப்பினும் தனது அபாரமான ஆட்டத்தால் இந்தியா அபார வெற்றிபெற்றது. இந்த பகல் - இரவு ஆட்டங்கள் ரசிகர்களிடையேயும் ஒரு ஈர்ப்பை உருவாக்கியுள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி ”பகல் -இரவு போட்டிகள் எனக்கு நம்பிக்கையையும், உற்சாகத்தையும் அளிக்கிறது. இது நிச்சயமாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும். அணி வீரர்களும் இதுபோன்ற ஆட்டங்களில் பங்கெடுத்து கொள்ள ஆர்வம் காட்டுகிறார்கள். இதனால் பிங்க் பந்து முறையையும், பகல் - இரவு ஆட்டத்தையும் வேறு சில போட்டிகளில் முயர்சித்து பார்க்கும் எண்ணம் உள்ளது.” என்று கூறியுள்ளார்.

இதேபோல வேறு ஒரு பேட்டியில் பேசிய இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி “பகல் - இரவு ஆட்டங்கள் எப்போதாவது நடத்தினால் மட்டும்தான் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும்” என்று கருத்து தெரிவித்துள்ளார்.