புதன், 10 டிசம்பர் 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 21 ஏப்ரல் 2025 (12:56 IST)

2025-26 ஆண்டுக்கான பிசிசிஐ ஒப்பந்தம்.. ருத்ராஜ் உள்பட 3 ஐபிஎல் வீரர்கள் சேர்ப்பு..!

2025-26 ஆண்டுக்கான பிசிசிஐ ஒப்பந்தம்.. ருத்ராஜ் உள்பட 3 ஐபிஎல் வீரர்கள் சேர்ப்பு..!
2025–26ஆம் ஆண்டுக்கான வீரர் ஒப்பந்த பட்டியலை பிசிசிஐ தற்போது வெளியிட்டுள்ளது. இதில், இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் மீண்டும் இடம் பெற்றுள்ளனர். மறுபுறம், கடந்தாண்டு இடம்பெற்ற ஷர்துல் தாக்கூர், கேஎஸ் பரத், ஆவேஷ் கான், ஜித்தேஷ் சர்மா உள்ளிட்டோர் இந்தாண்டு ஒப்பந்தத்தில் இல்லாதது கவனம் பெற்றுள்ளது.
 
ஏ+ தர பட்டியலில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி தொடர்ந்து இடம்பிடித்துள்ளனர். இவர்களுடன் ஜடேஜா மற்றும் பும்ராவும் அந்த பட்டியலில் நீடிக்கின்றனர்.
 
ஏ தரத்தில் ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல், முகமது சீராஜ், ஷுப்மன் கில், ரிஷப் பந்த் உள்ளிட்டோருக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. பி தரத்தில், சூர்யகுமார் யாதவ், அக்சர் படேல், ஜெய்ஸ்வால், குல்தீப் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளனர்.
 
சி தரத்தில் 19 வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். இதில் ரின்கு சிங், திலக் வர்மா, ஸஞ்சு சாம்சன், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார், இஷான் கிஷன், அபிஷேக் சர்மா, வருண் சக்ரவர்த்தி உள்ளிட்டோர் அடங்குவர்.
 
ஏ+ தர வீரர்களுக்கு ₹7 கோடி, ஏ தரத்துக்கு ₹5 கோடி, பி தரத்துக்கு ₹3 கோடி, சி தரத்துக்கு ₹1 கோடி என வருடாந்தம் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran