1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 19 ஜனவரி 2021 (15:36 IST)

வரலாற்று சாதனை வெற்றி: இந்திய அணிக்கு ரூ.5 கோடி பரிசு அறிவிப்பு

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இன்று முடிவடைந்த பிரிஸ்பேன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி மிக அபாரமாக விளையாடி 3 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது. அதுமட்டுமன்றி 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி செய்த இந்த வரலாற்று சாதனைக்காக பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. பிரதமர் மோடி, பிசிசிஐ தலைவர் கங்குலி, சச்சின் டெண்டுல்கர், சுந்தர் பிச்சை உள்பட பலர் இந்திய அணியை பாராட்டி வருகின்றனர்
 
இந்திய அணியின் வெற்றி குறித்து கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை கூறியபோது ’டெஸ்ட் தொடர் வரலாற்றில் இந்தியாவின் மிகச்சிறந்த வெற்றி, எனது வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார். அதேபோல் சச்சின் டெண்டுல்கர் இந்திய அணி ஒவ்வொரு பகுதியிலும் புதிய நாயகன் உருவாகிறான் ஒவ்வொரு முறை அடி வாங்கிய போதும் துணிச்சலோடு எதிர்கொண்டு விளையாடுகிறோம். காயங்களை தன்னம்பிக்கையை கொண்டு வெல்கிறோம். வரலாற்றில் ஆகச்சிறந்த வெற்றி இது என்று கூறியுள்ளார்
 
பிரிஸ்பேன் டெஸ்டில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றிய இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் வீரர்கள் வருங்காலத்திலும் சாதனை புரிய வாழ்த்துக்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்
 
இந்த நிலையில் ஆஸ்திரேலிய மண்ணில் வரலாற்று வெற்றி பெற்ற இந்திய அணிக்கு ரூ 5 கோடி போனஸ் என பிசிசிஐ அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது