செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 18 பிப்ரவரி 2022 (12:45 IST)

என் மகன் விளையாடுவதை பார்க்க மாட்டேன் - சச்சின்!

நான் அர்ஜுன் விளையாடுவதை பார்க்கப் போவதில்லை என இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பேட்டி அளித்துள்ளார். 

 
சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் தெண்டுல்கர். இவர் இடக்கை வேகப்பந்து வீச்சாளர். இந்நிலையில் சச்சின் தனது மகன் குறித்து பேட்டியளித்துள்ளார். அவர் கூறியதாவது, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் விளையாடுவதை பார்க்கும்போது அவர்கள் தேவையில்லாத மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். 
 
இதனை தவிர்க்கவே, நான் அர்ஜுன் விளையாடுவதை பார்க்கப் போவதில்லை. அவன் விளையாட்டில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். அதையும் மீறி நான் போய் அர்ஜுனின் ஆட்டத்தைப் பார்க்க நேர்ந்தாலும், எங்கோ ஓரிடத்தில் ஒளிந்துகொண்டே பார்ப்பேன். அர்ஜுனுக்கோ அல்லது அவனின் பயிற்சியாளருக்கு கூட நான் எங்கிருப்பேன் என்பதை தெரியப்படுத்தாமல் பார்க்க விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.