1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 29 ஜனவரி 2022 (15:36 IST)

அல்லு அர்ஜுனுடன் நடிக்க ஆசை… பாலிவுட் நடிகர் விருப்பம்!

பாலிவுட் மூத்த நடிகர் அனுபம் கேர் அல்லு அர்ஜுனுடன் நடிக்க ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 17 ஆம் தேதி வெளியான புஷ்பா திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. ஆனாலும் வசூலில் சோடை போகவில்லை. இதுவரை 300 கோடிக்கும் மேலாக திரையரங்கு மூலமாகவே வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. தென்னிந்தியா மட்டும் இல்லாமல் வட இந்தியாவிலும் இந்த படம் வட இந்திய நடிகர்களின் படத்துக்கு இணையாக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதையடுத்து புஷ்பா படத்தின் 2 ஆம் பாகம் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

இந்நிலையில் இந்த படத்தினைக் குறித்து பேசியுள்ள பாலிவுட் நடிகர் அனுபம் கேர் ‘புஷ்பா திரைப்படத்தை பார்த்தேன். உண்மையில் மிகச்சிறந்த பிளாக்பஸ்டர் படம். உற்சாகமான படம். அல்லு அர்ஜுன் நீங்கள் ஒரு ராக்ஸ்டார். உங்களின் நுணுக்கமான நடிப்பை ரசித்தேன். விரைவில் உங்களுடன் நடிக்க ஆசை’ என்று கூறியுள்ளார்.