1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 16 மார்ச் 2018 (12:00 IST)

வங்கதேசத்தை சேர்ந்த ஒரு லட்சம் பேர்களுக்கு ஆதார் அட்டை: அதிர்ச்சி தகவல்

ஆதார் அட்டை என்பது இந்திய குடிமகன்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வரும் நிலையில் வங்கதேசத்தை சேர்ந்த சுமார் ஒரு லட்சம் பேர்களுக்கு ஆதார் அட்டை மட்டுமின்றி வாக்காளர் அடையாள அட்டையும் வழங்கப்பட்டுள்ளதாக கர்நாடக அரசு மீது காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து கர்நாடக மாநில முன்னாள் துணை முதல்வரும் பாஜக பிரமுகருமான ஆர்.அசோக் கூறியதாவது:

கர்நாடக மாநிலத்தில் வங்கதேசத்தினரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சட்டவிரோதமாக தலைநகர் பெங்களூரு உள்பட பல நகரங்களில் வங்கதேசத்தினர் வசித்து வருகின்றனர். இதனால் மாநிலத்தில் ஆங்காங்கே சட்டவிரோத செயல்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால் கர்நாடக அரசு இது குறித்து அக்கறை கொள்ளமல் மறைமுகமாக வங்கதேசத்தினருக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது.

மேலும் கர்நாடகாவில் வசிக்கும் வங்க தேசத்தினருக்கு வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை மற்றும் குடும்ப அட்டை ஆகியவற்றையும் முதல்வர் சித்தராமையாவின் காங்கிரஸ் அரசு வழங்கி அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளது.

எனக்கு கிடைத்த தகவலின்படி, கர்நாடக அரசு 1 லட்சம் வங்க தேசத்தினருக்கு சட்ட விரோதமாக வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டை வழங்கியுள்ளது. இதனால் வங்கதேசத்தினர்களின் வாக்குகளை பெறலாம் என்பதே காங்கிரஸின் நோக்கமாக இருக்கலாம்,. மத்திய உள்துறை அமைச்சகம் முறையாக கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று அவர் கூறியுள்ளார்.