ஹைதராபாத்தில் படமாகும் ‘இந்தியன் 2’
‘இந்தியன் 2’ படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் தொடங்கி நடைபெறும் என்று தெரிகிறது.
கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் 1996ஆம் ஆண்டு ரிலீஸான படம் ‘இந்தியன்’. இந்தப் படத்துக்குப் பிறகு இருவரும் சேர்ந்து படம் பண்ணவே இல்லை. கிட்டத்தட்ட 22 ஆண்டுகளுக்குப் பிறகு மறுபடியும் இருவரும் இணைந்துள்ளனர். ‘இந்தியன் 2’ உருவாகப் போகிறது. லைகா நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.
கமல் கட்சி ஆரம்பித்து, ஊர் ஊராக பிஸியாகச் சுற்றி வருகிறார். ஷங்கருக்கும் ‘2.0’ படத்தின் கிராபிக்ஸ் பணிகள் இழுத்துக் கொண்டே போகின்றன. எனவே, ‘இந்தியன் 2’ தொடங்க தாமதமாகும் எனத் தெரிகிறது. ஆனாலும், ஹைதராபாத்தில் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் செட் அமைக்கும் பணிகள் தொடங்கிவிட்டதாம்.