முத்தரப்பு டி20 போட்டி: வங்கதேசத்திடம் இலங்கை அதிர்ச்சி தோல்வி

Last Modified சனி, 10 மார்ச் 2018 (22:49 IST)
இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய மூன்று நாடுகளுக்கு இடையிலான நிதாஹாஸ் கோப்பை போட்டிகள் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் இன்றைய போட்டியில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் மோதியது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி அதிரடியாக விளையாடி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 214 ரன்கள் குவித்தது. பெரேரா 74 ரன்களும், மெண்டிஸ் 57 ரன்களும் எடுத்தனர்.

இந்த நிலையில் 215 ரன்கள் எடுத்தால் என்ற கடினமான இலக்கை விரட்டிய வங்கதேசம், ஆரம்பம் முதலே அடித்து ஆடியது. இந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அதிரடியாக விளையாடி இருவரும் சேர்த்து 90 ரன்களை குவித்தனர். அடுத்து ஆட வந்த வீரர்களும் தொடர்ந்து அதிரடியாக விளையாடியதால் இந்த அணி 19.4 ஓவர்களில் 215 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று இலங்கைக்கு அதிர்ச்சியை கொடுத்தது


இதில் மேலும் படிக்கவும் :