இந்தியாவின் 2வது பணக்கார கட்சி எது தெரியுமா? ஆச்சரியமான தகவல்
இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளில் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சிகளில் பணக்கார கட்சி எது என்பது குறித்த சர்வேயை சமீபத்தில் டெல்லியை சேர்ந்த தனியார் அமைப்பு ஒன்று எடுத்தது. இந்த சர்வேயில் ஆச்சரியம் தரும் வகையில் முதல் இரண்டு இடத்தில் மாநில கட்சிகள் உள்ளது என்றால் நம்ப முடிகிறதா?
ஆம், இந்தியாவின் தேசிய கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளை பின்னுக்கு தள்ளிவிட்டு முதல் பணக்கார கட்சியாக உபி மாநிலத்தில் உள்ள சமாஜ்வாடி கட்சி உள்ளது. இந்த கட்சிக்கு கடந்த
2011-12ம் ஆண்டில் 212.86 கோடி சொத்துக்கள் இருந்தது. ஆனால் 2015-16ம் நிதியாண்டில் இந்த
கட்சியின் சொத்து மதிப்பு ரூ.635 கோடியாக உயர்ந்துள்ளது. இது 198% வளர்ச்சி என்றால் நம்ப முடிகிறதா?
அதேபோல் இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ள கட்சி எது தெரியுமா. சாட்சாத் நமது மாநிலத்தில் ஆளுங்கட்சியாக இருக்கும் அதிமுக தான். இதை நீங்கள் நம்பமுடியவில்லை என்று கூறினாலும் நம்பித்தான் ஆகவேண்டும். இக்கட்சியின் சொத்து மதிப்பு கடந்த. 2011-12ஆம் ஆண்டின்படி ரூ.88.21 கோடியாக இருந்தது. ஆனால் இதன் சொத்து மதிப்பு 2015-16ல் ரூ.224.87 ஆக உயர்ந்துள்ளது. அதாவது இந்த கட்சியின் சொத்துமதிப்பு 155% அதிகரித்துள்ளது.
கட்சிகள் மட்டும் வளர்ச்சி அடைந்தால் போதுமா? அந்த கட்சிகள் ஆளும் மாநிலங்களும் வளர்ச்சி அடைய வேண்டாமா? என்பதே அனைவரின் கேள்வியாக உள்ளது.