வியாழன், 14 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 14 மே 2019 (19:26 IST)

மே.இ.தீவுகள் அணியை அடிச்சு தூக்கிய வங்கதேசம்: புள்ளிப்பட்டியலில் முதலிடம்

வங்கதேசம், மேற்கிந்திய தீவுகள் மற்றும் அயர்லாந்து நாடுகளுக்கு இடையே முத்தரப்பு கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் ஐந்தாவது போட்டி நேற்று டப்ளின் நகரில் நடைபெற்றது
 
இந்த போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்து களத்தில் இறங்கியது. அந்த அணியின் கேப்டன் ஹோல்டர் 62 ரன்களும், ஹோப் 87 ரன்களும் அடித்தனர். மேற்கிந்திய தீவுகள் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 247 ரன்கள் எடுத்தது
 
248 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேச அணி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியதால் 47.2 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 248 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகளில் விளையாடி இரண்டில் வெற்றி பெற்ற வங்கதேச அணி 10 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. 4 விக்கெட்டுக்களை வீழ்த்திய வங்கதேச அணியின் முசாபர் ரஹ்மான் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.