வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 15 மார்ச் 2019 (10:00 IST)

நியூசிலாந்து துப்பாக்கி சூடு எதிரொலி: கிறிஸ்ட்சர்ச் டெஸ்ட் போட்டி ரத்து

நியூசிலாந்து நாட்டில் உள்ள கிறிஸ்ட்சர்ச் பகுதியில் உள்ள இரண்டு மசூதிகளில் இன்று மர்ம மனிதன் ஒருவன் நடத்திய கொடூரமான துப்பாக்கி சூட்டில் இதுவரை 6 பேர் பலியானதாகவும் பலர் காயம் அடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
 
இந்த துப்பாக்கி சூடு நடந்த மசூதி அருகேதான் வங்கதேச கிரிக்கெட் வீர்ர்கள் தொழுகை நடத்தி வந்தனர். நல்லவேளையாக இவர்கள் தொழுகை நடத்திய மசூதியில் துப்பாக்கி சூடு இல்லை என்பதால் அதிர்ஷ்டவசமாக கிரிக்கெட் வீர்ர்கள் அனைவரும் உயிர்தப்பினர்
 
இந்த நிலையில் வரும் 16ஆம் தேதி அதாவது நாளை நியூசிலாந்து மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெறவிருந்த 3வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி துப்பாக்கி சூடு சம்பவம் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே வங்கதேச வீரர்கள் விரைவில் நாடு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இந்த சுற்றுப்பயணத்தில் இதுவரை நடைபெற்ற மூன்று ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் வங்கதேச அணி தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது