செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 25 ஏப்ரல் 2019 (08:50 IST)

உலகக்கோப்பை கிரிக்கெட்: மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிப்பு!

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் மே மாதம் 30ஆம் தேதி முதல் நடைபெறவுள்ள நிலையில் இந்த போட்டியில் கலந்து கொள்ளும் இந்தியா உள்பட அனைத்து அணிகளும் வீரர்களை அறிவித்துவிட்ட நிலையில் கடைசியாக நேற்று மேற்கிந்திய தீவுகள் அணியும் தனது அணியை அறிவித்துள்ளது. இந்த அணியில் ஐபிஎல் போட்டியில் கலக்கி வரும் பிராவோ, ரஸல், கெய்ல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
 
உலகக்கோப்பை கிரிக்கெட் மேற்கிந்திய தீவுகளின் அணி வீரர்கள் விபரம் பின்வருமாறு:
 
1. ஜேசன் ஹோல்டர் (கேப்டன்)
2. பேபியன் அலென்
3. டேரன் பிராவோ
4. கார்லஸ் பிராத்வெய்ட்
5. ஷெல்டன் காட்ரெல்
6. கேப்ரியல்
7. கிறிஸ் கெய்ல்
8. ஹெட்மயர்
9. ஷாய் ஹோப்
10. எவின் லெவிஸ்
11. அஷ்லே நர்ஸ்
12. நிகோலஸ் பூரன்
13. கெமர் ரோச்
14. ஆந்த்ரே ரஸல்
15. ஒஷானே தாமஸ்
 
இவர்களில் ஹோல்டர், கிறிஸ் கெய்ல், பிராவோ, ரஸல், கெமர் ரோச் மற்றும் ஷெல்டன் காட்ரேல் ஆகிய ஆறு வீரர்களும் கடந்த 2015ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் விளையாடியவர்கள் என்பதும், 39 வயதான கிறிஸ் கெய்லுக்கு இது 5-வது உலக கோப்பை போட்டி என்பதும் குறிப்பிடத்தக்கது