தொடர்புடைய செய்திகள்
- தள்ளிப் போகும் சிம்பு 49… விக்ரம்மை இயக்குகிறாரா ராம்குமார் பாலகிருஷ்ணன்?
- ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!
- நான் விளம்பரம் செய்தது கேமிங் செயலிகளுக்கு மட்டுமே.. அமலாக்கத்துறை விசாரணைக்கு பின் விஜய் தேவரகொண்டா பேட்டி..
- அமலாக்கத்துறை அலுவலகத்தில் அனில் அம்பானி ஆஜர்.. கைதாக வாய்ப்பா?
- ரூ.17,000 கோடி கடன் மோசடி வழக்கு: அனில் அம்பானிக்கு அமலாக்கத்துறை சம்மன்
ஆன்லைன் சூதாட்ட செயலி விவகாரம்: சுரேஷ் ரெய்னாவிடம் அமலாக்கத்துறை விசாரணை!
ஆன்லைன் சூதாட்ட செயலிகளுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவிடம் அமலாக்கத்துறை இன்று விசாரணை நடத்துகிறது. இந்த செய்தி கிரிக்கெட் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சில ஆன்லைன் சூதாட்ட செயலிகள் மற்றும் அவற்றின் விளம்பரங்கள் தொடர்பான பணமோசடி வழக்குகளை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் ஆஜராகுமாறு சுரேஷ் ரெய்னாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. இதன் அடிப்படையில், அவர் இன்று விசாரணைக்கு ஆஜராக உள்ளார்.
ஏற்கனவே, இந்த வழக்கில் நடிகர்கள் விஜய் தேவரகொண்டா, ராணா உட்பட பலரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அந்த விசாரணையின் தொடர்ச்சியாக, அடுத்தகட்டமாக சுரேஷ் ரெய்னாவிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளது.
இன்றாஇய விசாரணைக்கு பிறகு, சுரேஷ் ரெய்னா செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளிக்கக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
