வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : வெள்ளி, 22 நவம்பர் 2019 (18:38 IST)

இந்தியன் 2-வில் 85 வயது பாட்டியாக பிரியா பவானி சங்கர்!

ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. பிரம்மாண்டமான இயக்குனர் ஷங்கர் இயக்கும் 14வது படம் இது. பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனம் தாயாருக்கும் இப்படம் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்தே பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது.
கமல், காஜல் அகர்வால், சித்தார்த், பிரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா, வெண்ணிலா கிஷோர்,  ரகுல் ப்ரீத் சிங் என பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துவரும் இப்படத்தின் அடிக்கடி செய்திகள் வெளிவந்தவண்ணம் இருக்கிறது. அண்மையில் கூட கமல் ஹாசன் சேனாதிபதி தோற்றத்தில் கருப்பு குதிரையில் சண்டைக்கு செல்லும் காட்சிகளும் , ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களும் வெளியாகி ஸ்வாரஸ்யத்தை ஏற்படுத்தியிருந்தது. இப்படத்தில் 90 வயது கமலுக்கு மனைவியாக காஜல் அகர்வால் நடிக்கிறார் என்ற தகவல் வெளிவந்திருந்தது.  
 
இந்நிலையில் தற்போது,  90 வயது கமலுக்கு தோழியாக  85 வயது கதாபாத்திரத்தில்  பிரியா பவானி ஷங்கர் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியவந்துள்ளது. எனவே கூடிய விரைவில் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.