வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 24 அக்டோபர் 2019 (17:15 IST)

போராட்டத்தை வாபஸ் பெற்றது வங்கதேசம்: இந்தியாவோடு மோத ரெடி!

வங்காளதேச கிரிக்கெட் வீரர்கள் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றதால் இந்தியாவோடு டி20 விளையாட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது.

வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 20 ஓவர் தொடர்கள் மற்றும் டெஸ்ட் தொடரை விளையாட உள்ளது. இந்த ஆட்டத்தினை பார்ப்பதற்காக வங்காளதேச பிரதமர் இந்தியா வர இருப்பதாக தெரிவித்திருந்தார். இதுகுறித்த ஏற்பாடுகள் இந்தியாவில் தடல்புடலாய் நடந்து கொண்டிருக்க, வங்கதேசத்திலோ கிரிக்கெட் வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர்.

வங்க தேச கிரிக்கெட் அணி ஆல் ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் ஊதிய உயர்வு, கிரிக்கெட் வாரிய வருவாயில் குறிப்பிட்ட சதவீதத்தை வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

இதனால் இந்தியாவுடனான வங்கதேச போட்டி ரத்தாகும் என கருதப்பட்டது. ஆனால் வீரர்களை அழைத்து பேசிய கிரிக்கெட் கவுன்சில் அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக கூறியுள்ளது. இதனால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

போராட்டம் வாபஸ் பெறப்பட்டதால் இந்திய வங்கதேச போட்டிகளுக்காக இந்திய அணி ஜரூராய் தயாராகி வருகிறது.