ரோஹித் ஷர்மாவின் ரன் மழை: ஆட்டம் முடிந்ததும் அடித்தது மழை!

Prasanth Karthick| Last Modified சனி, 19 அக்டோபர் 2019 (20:07 IST)
தென் ஆப்பிரிக்காவுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டி பாதியில் முடிந்துள்ள நிலையில் மழை பெய்ய தொடங்கியுள்ளது.

தென் ஆப்பிரிக்கா – இந்தியா இடையேயான டெஸ்ட் போட்டிகள் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. மூன்று டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட தொடரில் இரண்டு டெஸ்ட் போட்டிகளை இந்தியா வென்று வெற்றியை உறுதி செய்துள்ளது.

இந்நிலையில் இன்று மூன்றாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. ஆரம்பத்திலேயே தொடக்க ஆட்டக்காரரான மயங்க் அகர்வால் விக்கெட்டை இழக்க, தொடர்ந்து புஜாராவும், கோலியும் ஆட்டம் இழக்க இந்திய அணி தோற்க போகிறது என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மொத்த பொறுப்பையும் தான் ஏற்றுக்கொண்ட ரோகித் ஷர்மா அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதமடித்து விளாசினார்.

கூடவே ரஹானேவும் தன் பங்குக்கு ஒரு அரைசதம் வீழ்த்த ஸ்கோர் கிடுகிடுவென ஏற தொடங்கியது. ஆட்டம் முடியும் சூழலில் 58 ஓவர்களுக்கு 3 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்களை இந்தியா பெற்றுள்ளது. ஆட்டம் முடிந்த நிலையில் ராஞ்சியில் மழை வலுத்துள்ளது. மீத ஆட்டம் நாளை மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :