வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 21 மே 2022 (18:37 IST)

மும்பை ஜெயிக்க வேண்டும் என பிரார்த்தனை செய்யும் பெங்களூரு!

MivsDC
மும்பை ஜெயிக்க வேண்டும் என பிரார்த்தனை செய்யும் பெங்களூரு!
இன்றைய ஐபிஎல் போட்டியில் மும்பை அணி வெற்றி பெற வேண்டும் என பெங்களூர் அணி பிரார்த்தனை  செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் லீக் போட்டிகள் முடிவடையவுள்ள நிலையில் இன்றைய போட்டியில் மும்பை மற்றும் டெல்லி அணிகள் விளையாட உள்ளன
 
 இந்த போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்றால் மட்டுமே பெங்களூர் அணிக்கு பிளே ஆப் செய்ய செல்ல வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
14 புள்ளிகளுடன் நல்ல ரேட்டில் இருக்கும் டெல்லி அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்றாலே பிளே ஆப் சென்று விடும். அதனால் இன்றைய போட்டியில் டெல்லி அணி மும்பை அணியிடம் தோல்வி அடைந்தால் மட்டுமே பெங்களூர் 16 புள்ளிகளுடன் பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் என்பது குறிபிடத்தக்கது