திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 20 மே 2022 (12:33 IST)

வீடுகளுக்கு சென்று ரேஷன் திட்டம் ரத்து!

டெல்லியில் வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருட்களை வழங்கும் திட்டத்தை டெல்லி உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

 
டெல்லியில் ரேஷன் பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்கும் திட்டத்தை செயல்படுத்த ஆளும் ஆம் ஆத்மி அரசு திட்டமிட்டது. ஆனால், இதற்கு மத்திய அரசு மற்றும் பல்வேறு தரப்புகளிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியது.
 
இந்நிலையில் இது குறித்து வழக்கு தொடரப்பட்ட நிலையில் இதன் விசாரணையின் போது,  மாநில அரசு தனியாக வழங்கும் ரேஷன் திட்டத்தை வேண்டுமானால் வீடுகளுக்கு சென்று கொண்டு போய்க் கொடுக்கலாம். மத்திய அரசு வழங்கும் ரேஷன் தானியங்களை வழங்க இத்திட்டத்தை பயன்படுத்த முடியாது என்று கூறி திட்டத்தை ரத்து செய்து உத்தவிட்டுள்ளது டெல்லி உயர் நீதிமன்றம்.