டாஸ் வென்ற குஜராத் பேட்டிங் தேர்வு: பெங்களூருக்கு வெற்றி கிடைக்குமா?
டாஸ் வென்ற குஜராத் பேட்டிங் தேர்வு: பெங்களூருக்கு வெற்றி கிடைக்குமா?
ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் குஜராத் மற்றும் பெங்களூர் அணிகள் மோத உள்ளன என்பதை ஏற்கனவே பார்த்தோம்
இந்த நிலையில் சற்று முன் இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்ட நிலையில் டாஸ் வென்ற குஜராத் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்து உள்ளது. இதனை அடுத்து குஜராத் பேட்ஸ்மேன்கள் இன்னும் சில நிமிடங்களில் களத்தில் இறங்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
ஏற்கனவே 10 போட்டிகளில் வென்று 20 புள்ளிகளுடன் குஜராத் அணி முதலிடத்தில் உள்ளது. பெங்களூர் அணி 7 போட்டிகளில் வென்று 14 புள்ளிகளுடன் இருக்கும் நிலையில் இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்ல அதிக வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது