திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 19 மே 2022 (13:53 IST)

நஷ்டம் ஏற்படுத்தியதில் எல்.ஐ.சி. உலக அளவில் 2 ஆம் இடம்!

மும்பை பங்குச் சந்தையில் எல்.ஐ.சி. பங்குகள் விலை 30 ரூபாய்க்கு மேல் சரிய தொடங்கியதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி. 

 
இந்த வாரத்தின் மூன்று நாட்களிலும் சென்செக்ஸ் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில் இன்று திடீரென 1000 புள்ளிகள் சென்செக்ஸ் சரிந்துள்ளதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன்று காலை பங்கு வர்த்தகம் தொடங்கிய உடனே 1000 புள்ளிகள் சென்செக்ஸ் குறைந்து உள்ளது. இதனை அடுத்து மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 53200 என்ற அளவில் விற்பனையாகி வருகிறது. 
 
அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி சுமார் 300 புள்ளிகள் குறைந்து 15950 என்ற புள்ளிகளில் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பங்கு சந்தை கடந்த இரண்டு நாட்களாக ஏற்றத்தில் இருந்த நிலையில் இன்று திடீரென 1000 புள்ளிகள் சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 
 
இந்நிலையில் மும்பை பங்குச் சந்தையில் எல்.ஐ.சி. பங்குகள் விலை 30 ரூபாய்க்கு மேல் சரிய தொடங்கியதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைத்துள்ளனர். சந்தையில் பட்டியலிட்ட முதல் நாளில் முதலீட்டாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுத்தியதில் எல்.ஐ.சி. உலக அளவில் 2 ஆம் இடம் பிடித்துள்ளது. சந்தைக்கு வந்த போது ரூ.6 லட்சம் கோடியாக இருந்த எல்.ஐ.சியின் மதிப்பு ரூ.5,35,316 கோடியாக சரிய தொடங்கியது.