1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 5 மே 2019 (08:39 IST)

பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் அணி எது? பெங்களூர் வெற்றியால் மீண்டும் குழப்பம்

நேற்று நடைபெற்ற 54வது ஐபிஎல் கிரிக்கெட் லீக் போட்டியில் பெங்களூரு அணி 4 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளதால் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் 4வது அணி எது என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது. 
 
தற்போது ஐதராபாத், கொல்கத்தா ஆகிய இரண்டு அணிகளும் தலா 12 புள்ளிகள் பெற்றுள்ளன. பஞ்சாப் அணி 10 புள்ளிகள் பெற்றுள்ளது. ஐதராபாத் அணிக்கு 14 போட்டிகளும் முடிந்துவிட்டது. ஆனால் கொல்கத்தா, பஞ்சாப் அணிகளுக்கு தலா ஒரு போட்டிகள் மீதமுள்ளது. இதில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றால் அந்த அணி 14 புள்ளிகளுடன் பிளே ஆஃப் சுற்றுக்கு உறுதியாக சென்றுவிடும். அல்லது கொல்கத்தா அணி தோல்வி அடைந்து பஞ்சாப் அணி நல்ல ரன்ரேட்டில் வெற்றி பெற்றால் பிளே ஆஃப் சுற்றுக்கு சென்றுவிடும். இரண்டும் நடக்கவில்லை என்றால் ஐதராபாத் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும். 
 
நேற்றைய ஐதராபாத் மற்றும் பெங்களூர் போட்டியின் ஸ்கோர் விபரம்:
 
ஐதராபாத் அணி: 175/7  20 ஓவர்கள்
 
வில்லியம்சன்: 70
குப்தில்: 30
விஜய்சங்கர்: 27
சஹா; 20
 
பெங்களூர் அணி: 178/6  19.2 ஓவர்கள்
 
ஹெட்மயர்: 75
குர்கீரத்சிங்: 65
விராத் கோஹ்லி: 16
 
ஆட்டநாயகன்: ஹெட்மயர்
 
இன்றைய போட்டிகள்:
 
1. சென்னை மற்றும் பஞ்சாப் : மாலை 4 மணி
 
2. மும்பை மற்றும் கொல்கத்தா: இரவு 8 மணி