அதிவேகமாக 7000 ரன்களைக் கடந்த வீரர்… பாபர் ஆசம் சாதனை!
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் ஆசம் டி 20 கிரிக்கெட்டில் 7000 ரன்களை அதிவேகமாகக் கடந்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் ஆசம் அனைத்து வகையான போட்டிகளிலும் வீராட் கோலி ரன்களைக் குவித்து வருகிறார். இந்நிலையில் பாகிஸ்தானில் நடந்த உள்ளூர் டி 20 கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகிறார். இந்த போட்டியில் 25 ரன்கள் சேர்த்த போது டி 20 போட்டிகளில் 7000 ரன்களை அதிவேகமாகக் கடந்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார்.
இந்த சாதனையை அவர் 187 இன்னிங்ஸ்களில் கடக்க, கெய்ல் 192 இன்னிங்ஸ்களிலும், கோலி 212 ரன்களிலும் கடந்து அவருக்கு அடுத்த இடத்தில் உள்ளனர்.