சொத்து தகராறில் 6 வயது சிறுவனை அடித்துக் கொன்ற உறவினர்!
கேரள மாநிலம் இடுக்கியில் சொத்து தகராறு காரணமாக 6 வயது மகனை சுத்தியலால் தாக்கிக் கொலை செய்துள்ளார் உறவினர் ஒருவர்.
தமிழக கேரள எல்லையில் உள்ள ஆமைக்குண்டம் பகுதியில் வசித்து வரும் தம்பதிகள் ரியாஸ் மற்றும் சபியா. இவர்களுக்கு 15 வயதில் ஒரு மகளும் 6 வயதில் அப்துல் ரைஹான் என்பவரும் இருந்துள்ளனர். இந்த தம்பதிகளுக்கும் சபியாவின் சகோதரி ஆஷ்மி மற்றும் அவரது கணவர் ஷான் ஆகியோருக்கும் இடையே நீண்ட நாட்களாக சொத்துப் பிரச்சனை இருந்துள்ளது.
இது சம்மந்தமாக காவல் நிலையத்தில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சபியாவின் வீட்டுக்கு சென்ற ஷான் ஆத்திரத்தில் அப்துல் ரைஹானை சுத்தியலால் பலமாக தாக்கியுள்ளார். தடுக்க வந்த சபியா மற்றும் அவரின் தாயாரையும் தாக்கியுள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியான சபியாவின் மகள் ஆயிஷா கூச்சல் போட்டு அக்கம்பக்கத்தினரை அழைத்துள்ளார்.
அதனால் அங்கிருந்து ஷான் தப்பிச் சென்றுள்ளார். தாக்குதலில் அப்துல் ரைஹான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார். இது சம்மந்தமாக போலிஸார் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய ஷானை தேடி வருகின்றனர்.