செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 17 ஜனவரி 2020 (13:28 IST)

மீண்டும் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா: இம்முறை சுதாரிக்குமா இந்திய அணி!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இன்று ராஜ்கோட் மைதானத்தில் இரு அணிகளுக்கும் இடையே இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது
 
இந்த போட்டிக்கான டாஸ் சற்றுமுன் போடப்பட்டுள்ள நிலையில் ஆஸ்திரேலிய கேப்டன் டாஸ் வென்று பந்துவீச்சை முதலில் தேர்வு செய்தார். கடந்த போட்டியிலும் ஆஸ்திரேலியா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இன்றைய போட்டியில் ரிஷப் பண்ட்க்கு பதிலாக மனிஷ் பாண்டே களமிறங்கியுள்ளார். அதேபோல் ஷர்துல் தாகூருக்கு பதிலாக மணிஷ்பாண்டே தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது ரிஷப் பண்ட்க்கு காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் அணியில் இருந்து விலகியுள்ளார் 
 
இரு அணிகளிலும் விளையாடும் 11 வீரர்கள் பற்றிய விவரங்கள் இதோ:
 
இந்தியா: ஷிகர் தவான், ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், விராத் கோஹ்லி, ஸ்ரேயாஸ் அய்யர், மைஷ் பாண்டே, ஜடேஜா, நவ்தீப் சயினி, குல்தீப் யாதவ், ஷமி, பும்ரா
 
ஆஸ்திரேலியா: வார்னர், ஃபின்ஸ், லாபுசாஞ்சே, ஸ்டிபன் ஸ்மித், அலெக்ச் கேர்ரி, டர்னர், ஆஷ்டன் ஆகர், கம்மின்ஸ், ஸ்டார்க், ரிச்சர்ட்ஸன், ஆடம் ஜாம்பா