புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Updated : வெள்ளி, 17 ஜனவரி 2020 (11:14 IST)

பதிலடி கொடுக்குமா இந்தியா? இரண்டாவது ஒருநாள் இன்று தொடக்கம்!

இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் தோல்வியை தழுவிய இந்தியா இன்று இரண்டாவது ஒருநாள் போட்டியில் மீண்டும் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள உள்ளது.

இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான மூன்று ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. முன்னதாக வான்கடே மைதானத்தில் நடைபெற்ற முதல் நாள் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது இந்தியா. வான்கடே மைதானம் இந்திய வீரர்களின் பேட்டிங்கிற்கு சாதகமாக இல்லை என்று கூறப்பட்டது.

இந்நிலையில் இன்று ராஜ்கோட்டில் இரண்டாவது ஒருநாள் ஆட்டம் நடைபெற உள்ளது. முதல் ஒருநாள் போட்டியின் போது ரிஷப் பண்டுக்கு தலையில் காயம் பட்டதால் இந்த ஆட்டத்தில் அவருக்கு பதிலாக கேதர் ஜாதவ் விளையாடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆட்டம் போல் அல்லாமல் இந்த ஆட்டத்தில் ரோகித் ஷர்மா மற்றும் கோலி தங்களது முழு பலத்தையும் செலுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது.

முதல் ஆட்டத்தில் தோல்வியடைந்த நிலையில் அடுத்த இரண்டு ஆட்டங்களை கைப்பற்றினால் மட்டுமே தொடரை வெல்ல முடியும் என்ற நிலையில் இருப்பதால் ரசிகர்கள் இன்றைய ஆட்டத்தை ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.