செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 2 மார்ச் 2019 (11:50 IST)

பாகிஸ்தானில் என்ன நடந்தது? வெளியானது அபிநந்தனின் வாக்குமூலம்

இந்தியா - பாகிஸ்தான் தாக்குதலின் போது பாகிஸ்தான் பிடியில் சிக்கிய விமான படை வீரர் அபிநந்தன் நேற்று இரவு 9 மணிக்கு அடாரி வாகா எல்லையில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். 
நேற்று 5 மணிக்கு ஒப்படைக்கப்பட்டிருக்க வேண்டிய அவர், தாமதமாக 9 மணிக்கு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். இந்த தாமதத்திற்கு பாகிஸ்தானி சில நடைமுறைகள் காரணம் என கூறப்படுகிறது. 
 
இந்நிலையில் பாகிஸ்தானில் தன்னக்கு என்ன நடந்தது என்பதை அபிநந்தன் விவரிக்கும் வீடியோ வாக்குமூலம் ஒன்றை பாகிஸ்தான் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் பல கட் மற்றும் எடிட் உள்ளது. 
 
எனவே இந்த வீடியோவில் அபிநந்தன் தாமாக முன்வந்து பேசினாரா அல்லது கட்டாயப்படுத்தி பேச வைக்கப்பட்டாரா? என்பதன் சரியான விவரங்கள் தெரியவில்லை. அந்த வீடியோவில் அபிநந்தன் கூறியிருப்பது பின்வருமாறு, 
பாகிஸ்தான் வான்வெளிக்குள் நான் இலக்கை நோக்கி பறந்தபோது, என்னுடைய விமானம் பாகிஸ்தான் விமானப்படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதன்பின் விமானத்தில் இருந்து வெளியே பறந்த நான், பாராசூட் மூலம் குதித்தேன். என்னிடம் ஒரு துப்பாக்கி இருந்தது.
 
நான் விழுந்த இடத்தில் ஏராளமான மக்கள் இருந்தனர். அவர்களிடம் இருந்து என்னை காத்துக்கொள்ள துப்பாக்கியை கைவிட்டு, நான் ஓட முயற்சித்தேன். மக்கள் என்னைத் துரத்தினார்கள், அவர்கள் மிகுந்த உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்தனர்.
 
அப்போது, பாகிஸ்தான் ராணுவத்தை சேர்ந்த இரு அதிகாரிகள் என்னை அவர்களிடம் இருந்து மீட்டனர். என்னை பாகிஸ்தான் ராணுவத்தினர் அவர்களின் முகாமுக்கு கொண்டு சென்று, எனக்கு முதலுதவி அளித்து, மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். 
 
பாகிஸ்தான் ராணுவத்தினர்தான் என்னை மக்கள் கூட்டத்தில் இருந்து காப்பாற்றினார்கள். பாகிஸ்தான் ராணுவத்தினர் மிகுந்த நேர்த்தியாகவும், அவர்களின் நடத்தை நல்லவிதமாகவும் இருந்தது என அந்த வீடியோவில் அவர் பேசியுள்ளார்.