ஆஸ்திரேலியாவுடன் மோதும் இந்திய அணி! – இன்று தொடக்கம்!

india
Prasanth Karthick| Last Modified செவ்வாய், 14 ஜனவரி 2020 (11:01 IST)
ஆஸ்திரேலியா – இந்தியா இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி இன்று மும்பையில் தொடங்க உள்ளது.

இந்தியாவுடனான மூன்று ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாட ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இந்தியா வந்துள்ளது. 2020ம் ஆண்டு தொடங்கி முதலாவதாக இலங்கையுடன் மோதிய இந்தியா 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. இந்நிலையில் தற்போது விளையாட வந்திருக்கும் ஆஸ்திரேலிய அணியினர் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட மக்களின் சார்பாக வெற்றியை அளிக்க இருப்பதாக கூறியிருக்கிறார்கள்.

கடந்த ஆண்டு உலக கோப்பையில் இந்தியாவுடன் மோதிய பிறகு மீண்டும் இந்தியாவுடன் மோதும் டெஸ்ட் போட்டி இதுவாகும். இந்த வருடத்தில் ஆஸ்திரேலியாவுக்கு முதல் போட்டியும் இதுதான். எனவே முதல் போட்டியிலேயே வெற்றி பெற வேண்டும் என்கிற முனைப்பில் ஆஸ்திரேலிய வீரர்கள் உள்ளனர்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இரு அணிகளுமே நல்ல வலிமையில் உள்ளன. மேலும் கடந்த ஆட்டங்களில் இரு அணிகளுமே எதிர் அணிகளை வீழ்த்தி வெற்றியை மட்டுமே பெற்று வந்திருக்கின்றன. இரண்டு ஜாம்பவான் அணிகள் மோதி கொள்ளும் ஆட்டம் என்பதால் இந்த தொடர் ரசிகர்களிடையே ஆர்வத்தை எழுப்பியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :