ஆரம்பத்திலேயே தடுமாறும் ஆஸ்திரேலிய அணி

Last Modified ஞாயிறு, 10 மார்ச் 2019 (18:32 IST)
இந்தியா ஆஸ்திரேலியாவிற்கிடையேயான 4வது ஒருநாள் போட்டியில்  ஆஸ்திரேலிய அணி விக்கெட்டுக்களை இழந்து தவித்து வருகிறது.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி ஒருநாள் போட்டித் தொடர்களில் விளையாடி வருகிறது. இந்நிலையில் இன்று மொஹாலியில் நடைபெற்று வரும் 4வது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. 
 
இறுதியில் 9 விக்கெட் இழப்பிற்கு 358 ரன்கள் எடுத்தது இந்தியா.  359 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வரும் ஆஸ்திரேலியா 10 ஓவர்களில் 47 ரன்னிற்கு 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது. இதே நிலைமை நீடித்தால் ஆஸ்திரேலியா தோல்வியடைய வாய்ப்புள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :