ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 10 மார்ச் 2019 (17:15 IST)

ரன்களை குவித்த இந்தியா: திக்குமுக்காடிப்போன ஆஸ்திரேலியா; ஜெயிக்கப்போவது யார்?

இந்தியா ஆஸ்திரேலியாவிற்கிடையேயான 4வது ஒருநாள் போட்டியில்  இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடினர்.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி ஒருநாள் போட்டித் தொடர்களில் விளையாடி வருகிறது. இந்நிலையில் இன்று மொஹாலியில் நடைபெற்று வரும் 4வது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் தவான், ரோஹித் சிறப்பாக விளையாடினர்.
 
ரோஹித் 92 பந்துகளுக்கு 95 ரன்கள் எடுத்து அவுட்டானார். தவான் 143 ரன்களை எடுத்து அவுட்டானார். கோலி 7 ரன்களில் அவுட்டாக அடுத்தடுத்து களமிறங்கிய அனைத்து வீரர்களும் சொற்ப ரன்கள் எடுத்து அவுட்டாகினர்.
இறுதியில் 9 விக்கெட் இழப்பிற்கு 358 ரன்கள் எடுத்துள்ளது இந்தியா. ரொம்பவே டஃப்பான ஸ்கோரைதான் இந்திய வீரர்கள் கொடுத்துள்ளனர். 359 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ர இலக்குடன் அடுத்ததாக விளையாட இருக்கும் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் இந்திய வீரர்களின் பந்துவீச்சை தாக்குப்பிடிப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.