1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
  4. Is Natarajan play in second ODI?

இரண்டாவது ஒருநாள் போட்டியில் நடராஜன் களமிறக்க படுகிறாரா? பரபரப்பு தகவல்

நடராஜன்
இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருக்கும் நிலையில் முதலாவது ஒருநாள் போட்டியில் 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது 
 
இந்த போட்டியில் பந்து வீச்சாளர் சயினி தனது முழு திறமையை காண்பிக்கவில்லை என ரசிகர்கள் தங்களது அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்
 
இந்த நிலையில் ஆஸ்திரேலியா பிட்சில் நடராஜனின் யார்க்கர் பந்துகள் மிகவும் சிறப்பாக இருக்கும் என்பதால் இரண்டாவது ஒருநாள் போட்டியில் அவர் அணியில் இணைக்கப் பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
ஏற்கனவே ஒரு நாள் போட்டியில் நடராஜன் களமிறக்கப்படுவார் என பிசிசிஐ தெரிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 2வது ஒருநாள் போட்டியில் சயினிக்கு பதிலாக நடராஜன் களமிறக்கப்படுவாரா? நடராஜனின் யார்க்கள் தெறிக்க வைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
அடுத்த கட்டுரையில்
ஆஸ்திரேலியாவை வீழ்த்த தோனி போன்ற பிளேயர் தேவை: சொன்னது யார் தெரியுமா?