இங்கிலாந்து அணிக்கு 3வது தோல்வி: அரையிறுதிக்கு செல்லுமா?

Last Modified செவ்வாய், 25 ஜூன் 2019 (23:07 IST)
கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக கருதப்பட்ட இங்கிலாந்து அணி இந்த தொடரில் மூன்றாவது தோல்வியை இன்று அடைந்துள்ளதால் இந்த அணி அரையிறுதிக்கு செல்லுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது
 
இங்கிலாந்து அணி இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் தென்னாப்பிரிக்கா, வங்கதேசம், மேற்கிந்திய தீவுகள், ஆப்கானிஸ்தான் ஆகிய நான்கு அணிகளை மட்டுமே வென்றுள்ளது. ஆஸ்திரேலியா, இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுடன் மோதி தோல்வி அடைந்துள்ளது. இன்னும் இந்தியா, நியூசிலாந்து ஆகிய பலமான அணியுடன் மோதவேண்டிய நிலை உள்ளது. இந்த இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே இங்கிலாந்து அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது
 
அதே நேரத்தில் ஆறு வெற்றிகளை பெற்று 12 புள்ளிகள் பெற்ற ஆஸ்திரேலியா, அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது
 
இன்றைய போட்டியின் ஸ்கோர் விபரம்
 
ஆஸ்திரேலியா: 285/7  50 ஓவரக்ள்
 
பின்ச்: 100
வார்னர்: 53
ஸ்மித்: 38
கார்ரே: 38
 
இங்கிலாந்து: 221/10  44.4 ஓவர்கள்
 
ஸ்டோக்ஸ்: 89
பெயர்ஸ்டோ: 27
வோக்ஸ்: 26
ரஷித்: 25
 
ஆட்டநாயகன்: பின்ச்
 
நாளைய போட்டி: நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான்இதில் மேலும் படிக்கவும் :