செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 25 ஜூன் 2019 (19:03 IST)

வெஸ்ட் இண்டீஸ் வீரருக்கு நெஞ்சுவலி – மருத்துவமனையில் அவசர சிகிச்சை

வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டனான ப்ரைன் லாரா நெஞ்சு வலி காரணமாக மும்பையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் ப்ரைன் லாரா. சிறந்த பேட்ஸ்மேனான இவருக்கு இந்தியாவிலும் பல ரசிகர்கள் உள்ளனர். நடைபெற்று வரும் உலகக்கோப்பை போட்டிகளை இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஒளிபரப்பி வருகிறது. அதற்கு ஒளிபரப்பு உதவிக்காக ப்ரைன் லாரா மும்பையில் தங்கியுள்ளார். இரண்டு வருடங்களுக்கு முன்பு இவருக்கு இதய கோளாறு காரணமாக அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் அவர் பணியாற்றிக் கொண்டிருந்தபோது திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.