1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
  4. Aussie stuggled after losing three early wickets

12 ஒவருக்கு 29 ரன்கள், 3 விக்கெட் – தடுமாறும் ஆஸ்திரேலியா, அனல் பறக்கும் இங்கிலாந்து பவுலிங் !

இங்கிலாந்து
இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இன்று ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் போட்டி நடந்து வருகிறது.

நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. அதையடுத்து இரண்டாவது அரையிறுதி போட்டி இன்று ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்தது. முதலில் களமிறங்கிய பிஞ்ச் டக் அவுட்டாகி வெளியேற, வார்னர் 9 ரன்களிலும் ஹாண்ட்ஸ்கோம்ப் 4 ரன்களிலும் அவுட் ஆகி வெளியேறி அதிர்ச்சி அளித்தனர். அதையடுத்துக் களத்துக்கு வந்த ஸ்மித்தும் அலெக்ஸ் கேரியும் நிதானமாக விளையாடி வருகின்றனர்.

தற்போது வரை ஆஸி 12 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 29 ரன்களை மட்டுமே எடுத்து தடுமாறி வருகிறது.
அடுத்த கட்டுரையில்
தோனியை நம்பி மோசம் போன ரசிகர்: டெல்லியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்