வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 2 ஜூன் 2019 (08:20 IST)

தொடர்ச்சியாக அடிவாங்கும் ஆசிய அணிகள்: முற்றுப்புள்ளி வைக்குமா இந்தியா?

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆசிய அணிகள் முழுமையாக 50 ஓவர்கள் விளையாட முடியாமல் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து திணறி வருகின்றன. இந்த நிலையில் இந்திய அணி முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
 
இதுவரை நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் மேற்கிந்திய தீவுகள் அணியுடன் மோதிய பாகிஸ்தான், நியூசிலாந்து அணியுடன் மோதிய இலங்கை, ஆஸ்திரேலியா அணியுடன் மோதிய ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் முழுமையாக 50 ஓவர்கள் விளையாட முடியாமல் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தன. குறிப்பாக பாகிஸ்தான் அணி 105 ரன்களுக்கும், இலங்கை அணி 136 ரன்களுக்கும் ஆட்டமிழந்து படுதோல்வியை சந்தித்தது. இந்த போட்டிகள் இரண்டு இன்னிங்ஸ் சேர்த்தும் 50 ஓவர்கள் கூட விளையாடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் ஆசிய அணிகளின் படுதோல்வியை இந்தியா தடுத்து நிறுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. வரும் 5ஆம் தேதி தென்னாப்பிரிக்க அணியுடன் மோதவுள்ள இந்திய அணி வெற்றி பெற்று ஆசிய அணிகளின் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என ரசிகர்கள் விரும்புகின்றனர்.
 
இந்த நிலையில் இதுவரை முடிவடைந்துள்ள போட்டிகளின்படி மேற்கிந்திய தீவுகள், நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் தலா இரண்டு புள்ளிகளை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது