டாஸ் வென்ற நியுசிலாந்து பவுலிங் – இலங்கை நிதானம்!

Last Modified சனி, 1 ஜூன் 2019 (15:33 IST)
உலகக்கோப்பைத் தொடரின் மூன்றாவது போட்டியில் இன்று இலங்கை நியுசிலாந்து அணிகள் மோதுகின்றன.

உலககோப்பை போட்டிகள் இந்த முறை கிரிக்கெட்டின் பிறப்பிடமான இங்கிலாந்தில் நடைபெறுகின்றன. இரண்டு தினங்களுக்கு முன் தொடங்கிய போட்டியில் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் வெற்றி பெற்றுள்ளன. அதையடுத்து இன்று மூன்றாவது நியுசிலாந்து மற்றும் இலங்கை அணிக்கு இடையில் நடைபெற்று வருகிறது.

கார்டிஃப் மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற நியுசிலாந்து அணி முதலில் பவுலிங் வீச முடிவு செய்துள்ளது. இதையடுத்து முதலில் களமிறங்கிய இலங்கை அணி 7 ஓவர்களுக்கு 41 ரன்கள் சேர்த்து ஒரு விக்கெட்டை இழந்துள்ளது. வலிமைமிக்க நியுசிலாந்து அணியை சமாளிக்க இலங்கை அணி மிகப்பெரிய ஸ்கோரை இலக்காக நிர்ணயிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இலங்கை அணி:-
கருணரத்னே (கே), திருமண்ணே, குசல் பெராரா, குசால் மெண்டிஸ், ஏஞ்சலோ மேத்யூஸ், டி சில்வா, பெராரா, இசுரு உடானா,ஜீவன் மெண்டிஸ் , சுரங்கா லக்மல்,லஸித் மலிங்கா
நியுசிலாந்து அணி:-

மார்ட்டின் குப்தில், காலின் மன்ரோ, கேன் வில்லியம்ஸன் (கே),ராஸ் டெய்லர்,  டாம் லாதம், ஜேம்ஸ் நீஷம், காலின் டி கிராண்ட்ஹோம், மிச்செல் சாண்ட்னர், மெட் ஹென்றி, பெர்குஸன், ட்ரண்ட் போல்ட்இதில் மேலும் படிக்கவும் :