செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 28 ஏப்ரல் 2019 (14:03 IST)

ஆசிய பளுதூக்கும் போட்டி : தமிழக வீரர் 3 தங்கம் வென்றார்

ஹாங்காங்கில் நடைபெற்ற பளுதூக்கும் போட்டியில் 3 பதக்கங்களை வென்று தேசத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.
ஹாங்காங்கில் நடைபெற்ற ஆசிய பளுதூக்கும் போட்டியில் 3 தங்கப்பதக்கம் வென்ற நவீன் இன்று சென்னை வந்தடைந்தார், அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
 
சென்னையில் உள்ள அயனாவரத்தைச் சேர்ந்த நவீன் 83 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்று 3 தங்கப்பதக்கம் ஒரு வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
 
இதுபற்றி நவீன் கூறியதாவது :
 
நன் தங்கம் வென்ற போது ஹாங்காங்கில் இந்தியாவின் தேசிய கீதம் ஒலித்ததில் பெருமை அடைகிறேன். வருகின்ற காமன்வெல்த் போட்டியிலும் வெல்லுவேன். காமன் வெல்த் போட்டியில் பங்கேற்ற தமிழக அரசு உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.