புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 25 ஏப்ரல் 2019 (10:32 IST)

ஆசிய தடகளப் போட்டியில் மீண்டும் தங்கம் – 1500 மீட்டர் போட்டியில் அசத்திய சித்ரா !

கத்தாரில் நடைபெற்று வரும் ஆசிய தடகளப்போட்டிகளின் கடைசி நாளில் இந்தியாவுக்கான மூன்றாவது தங்கத்தை வென்றுள்ளார் கேரளாவை சேர்ந்த சித்ரா.
 
23 ஆவது ஆசிய தடகளப்போட்டிகள் தற்போது கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்று வருகிறது. இதன் கடைசி நாளான இன்று 1500 மீட்டருக்கான ஓட்டப்பந்தயத்தில் கேரளாவைச் சேர்ந்த பியு சித்ரா தங்கம் வென்று அசத்தியுள்ளார்.பந்தய தூரத்தை அவர் 4 நிமிடம் 14.56 வினாடியில் கடந்து சாதனைப் புரிந்துள்ளார்.

ஏற்கனவே  800 மீட்டருக்கான ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் சார்பில் கலந்துகொண்ட தமிழகத்தைச் சேர்ந்த 30 வயதாகும் கோமதி மாரிமுத்து தங்கப்பதக்கத்தை வென்று முதல் தங்கத்தை வென்று பெருமை சேர்த்துள்ளார்.

இந்தியா இந்த தடகளப்போட்டிகளில் 3 தங்கம் , 8 வெள்ளி மற்றும் 7 வென்கலம் ஆகிய பதக்கங்களை வென்று புள்ளிப்பட்டியலில் 4 ஆம் இடத்தில் உள்ளது.